Showing posts with label துக்ளக் கேள்வி பதில். Show all posts
Showing posts with label துக்ளக் கேள்வி பதில். Show all posts

Friday, September 26, 2014

கேள்வி – பதில்
*********************
கே: ‘ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிப்போம்’ என்று அதிபர் ஒபாமா சபதம் போட்டுள்ளாரே? இது சாத்தியம் என்று எண்ணுகிறீர்களா?
ப: இது சாத்தியமானதுதான் என்று, இந்த விவகாரத்தை நன்கு புரிந்து கொண்ட சில அயல்நாட்டு விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இப்படிப் பலம் பெற்று திகழ்வதற்கான காரணங்களில் அமெரிக்காவும் ஒன்று. ஸிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கு எதிராக ‘மக்கள் கலகம்’ தோன்றியபோது, இந்தத் தீவிரவாதிகள் அதில் கலந்து கொள்ள, அப்போது ஸிரியா அதிபரை எதிர்த்த அமெரிக்கா, இவர்களுக்கு உதவிகள் செய்தது. அதனுடைய பலன் அமெரிக்காவை மட்டுமல்ல, பல்வேறு நாடுகளை இன்று அச்சுறுத்துகிறது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பது இப்படித்தான் போய் முடிகிறது.
 பிந்தரன் வாலேயை இந்திரா காந்தி தூண்டி விட்டார் – அந்தப் பிந்தரன் வாலே ஆதரவாளர்களாலேயே அவர் கொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு பல வகைகளில் உதவியது – ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். தீவிரவாதத்தை யாருக்கு எதிரானது என்று பார்க்காமல், அந்தக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் எல்லா நாடுகளும் இயங்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு காண வழி பிறக்கும்.

Tuesday, August 12, 2014

ஆவணி அவிட்டம் என்பது என்ன?

கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?
சோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.
வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.
கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?
சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக – உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.
தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில் – அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.
ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Thursday, March 28, 2013

துக்ளக் கேள்வி பதில்கள்

துக்ளக் கேள்வி பதில்கள் 

கே : இலங்கைப் பிரச்னையில், இப்போது மாணவர்களும் இணைந்து கொள்வது பற்றி?

ப : இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது எதுவும் நடந்து விடாது. ஆனால் இங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்திற்கு இது தீமை செய்யும். இந்த மாதிரி போராட்டங்கள் சாதிக்கப் போவது இவ்வளவுதான்.



கே : டெஸோ அமைப்பு வலிமை பெற வாய்ப்புண்டா?


ப : தி.மு.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இதில் அக்கறை காட்டவில்லை. தேர்தல் ஓட்டுக்காகவே கூட மற்ற பல கட்சிகளின் கூட்டணியை நாட வேண்டிய நிலையில் உள்ள தி.மு.க., இந்த தனி டெஸோவிற்கு என்ன வலிமையைச் சேர்க்கப் போகிறது? முதல் டெஸோ மறைந்தது போல, இரண்டாம் டெஸோவும் நாளடைவில் மறைந்து போகும்.



கே : இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா தனிக் கட்சி துவங்கியுள்ளாரே! ஜெயிப்பாரா?

ப : ஜெயிக்க மாட்டார். ஏதாவது ஒரு சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள கட்சியைக் கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்துவாரோ, என்னவோ! அதற்கு மேல் அவருக்குப் பலம் கிட்டும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.



கே : இலங்கைப் போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை கோருவது தொடர்பாக, இந்தியா ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறது?

ப : இலங்கை விரோதி நாடு அல்ல; அந்த நாட்டுடன் இந்தியாவிற்கு தொழில் ரீதியாக, வர்த்தக ரீதியாக உறவுகள் இருக்கின்றன; அங்குள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் சம உரிமை பெறுவதற்கு வழி இந்திய – இலங்கை விரோதம் அல்ல; இன்று இலங்கைக்கு நாம் செய்வதை, நாளை காஷ்மீர் தொடர்பாக நமக்குச் செய்ய பாகிஸ்தான் முனையும்.... என்பது போன்ற பல காரணங்களினால்தான், இந்தியா இவ்விஷயத்தை ஜாக்கிரதை உணர்வுடன் அணுகுகிறது.



கே : ‘தலைவர் கலைஞர் நடத்தும் போராட்டங்களை அரசியல் தந்திரம் என்று கூறுவது வருந்தத்தக்கது’ – என்கிறாரே கனிமொழி எம்.பி.?


ப : நியாயம்தானே! கலைஞரின் நடவடிக்கைகளை ‘அரசியல்’ என்று கூறலாமே தவிர, ‘தந்திரம்’ என்று எப்படிக் கூறுவது? தந்திரம் என்றால், அதைச் செய்பவர்களுக்கு அது உதவ வேண்டுமே? அவருடைய அரசியல் நடவடிக்கைகள் அவருக்கோ, அவருடைய கட்சிக்கோ உதவுகிற மாதிரியா இருக்கின்றன? அதைத்தான் கனிமொழி சுட்டிக்காட்டியிருக்கிறார்.



கே : இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் நிலையைத் தாங்கள் ஆதரிக்கிறீர்களா?

ப : அநேகமாக.



கே : சுப்ரமண்யம் ஸ்வாமி இலங்கையில் அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியது சரியா, தவறா?

ப : ஒரு நட்பு நாட்டின் அதிபரை, இங்குள்ள ஒரு அரசியல்வாதி சந்திப்பதால் ஒரு தவறுமில்லை.



கே : ‘இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், அதன் விளைவாக பெரிதும் பாதிக்கப்படப் போவது இலங்கைத் தமிழர்கள்தான். அவர்களுக்கு நாம் தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளை வழங்க முடியாத நிலையும் ஏற்படும்’ – என்கிறாரே ஞானதேசிகன்! இது மிரட்டல்தானே?

ப : இதில் என்ன மிரட்டல் இருக்கிறது? ஞானதேசிகன் ஒரு நடைமுறை உண்மையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு நாம் பிரச்னைகளை உருவாக்கி விடக் கூடாது என்கிற பொருளில் அவர் பேசியிருப்பதில் தவறு காண்பது சரியல்ல. 

கே : காவிரிப் பிரச்னையிலும், இலங்கைப் பிரச்னையிலும் கலைஞர் குழப்பியது போல், வேறு எந்த அரசியல் தலைவரும் குழப்பியது உண்டா! இப்படிக் குழப்புவதற்கு காரணம் என்ன...?

ப : குழப்புவது என்பது மற்ற பலருக்கு ஒரு தவறு; வேறு வழியில்லாமல் நிகழ்ந்து விடுவது. கலைஞருக்கு அது ஒரு கலை; அவர் பாடுபட்டுக் கற்று வந்தது அது. இடைவிடாத பயிற்சியின் மூலம் அந்தக் கலையில் அவர் வெகுதூரம் முன்னேறி விட்டார்.



கே : மார்ச் 12-ஆம் தேதியன்று டெஸோ போராட்டத்தில் பங்கேற்ற திருச்சி தி.மு.க.வினர் கைகளில் இருந்த பேனர்களில், பிரபாகரன் மகனின் பெயர் ‘பாலகிருஷ்ணன்’ என்று படு அபத்தமாக அச்சிடப்பட்டிருந்தது பற்றி? (தினமலர் 13.3.13 புகைப்படத்துடன் செய்தி)

ப : போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம், நமது நாட்டு அரசியல் போராட்டங்களில் கிடையாது.



கே : ‘டெஸோ சார்பில் ஈழத் தமிழர் நலன்களுக்காக நடத்தப்பட்ட பொதுவேலை நிறுத்தம், பிரமாதமான வெற்றி அடைந்துள்ளது’ – என்று கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது பற்றி?


ப : படுதோல்வியையே, வெற்றி என்று கருதுகிற பக்குவத்தை அவர் அடைந்திருப்பது பாராட்டத்தக்கது. இதே மாதிரி மகிழ்ச்சியை பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. பெறட்டும். அது தமிழகத்திற்கும், நாட்டிற்கும் நல்லது. 

Saturday, February 16, 2013

துக்ளக் கேள்வி பதில்

கே: கலைஞர், தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அடிக்கடி சொல்லி வருவதைக் கிண்டல் செய்யும் தாங்கள், உங்களையும் அறியாமல் கம்யூனிஸ்ட்களைப் பாராட்டுகிறீர்கள் என்றுதானே அர்த்தமாகிறது? 

ப: கலைஞர், ஒரு கம்யூனிஸ்ட் என்பதைக் கிண்டல் செய்தால், அது கம்யூனிஸ்ட்களுக்குப் பாராட்டு என்று கூறுவதால், நீங்கள் உங்களையும் அறியாமல் கலைஞரைக் கிண்டல் செய்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. சரிதானே?



கே: கூட்டணிக்காக ஏழு எம்.பி. தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ஸீட்டும் தே.மு.தி.க.வுக்குத் தர தி.மு.க. ரெடியாமே? 

ப: நான் கேள்விப்பட்டது வேறுவிதமாக இருக்கிறதே! பதினைந்து எம்.பி. தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா ஸீட்டும் தரவில்லை என்றால், தி.மு.க. கூட்டணியே வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமை தீர்மானித்துவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. (நீங்கள்தான் எதையாவது கிளப்பிவிட வேண்டுமா, என்ன? எனக்கு அந்த உரிமை கிடையாதா? ஏதோ என்னால் முடிந்ததை நானும் செய்து வைக்கிறேன். இதனால் சில பிரச்னைகள் எழுந்தால் நல்லதுதானே!)

Saturday, February 9, 2013

துக்ளக் கேள்வி பதில்



கே: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்திக்கு, நாட்டின் கிராமப் பகுதிகளைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நன்கு தெரியும் என்கிறாரே கருணாநிதி? 

ப: கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் ஒரு சிலவற்றில் ரொட்டியோ, சப்பாத்தியோ சாப்பிட்டால், கிராமப் பகுதிகளைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம் என்று கலைஞர் நினைக்கிறார் போலிருக்கிறது. இதுதான் சரியான வழி என்றால் ஒருவன், ஒரு அணு விஞ்ஞானியின் வீட்டிற்குச் சென்று ஒருநாள் ஒரு இட்லி சாப்பிட்டு விட்டு வந்தால் போதும். அவனுக்கு அணு விஞ்ஞானம் பற்றி எல்லாம் தெரிந்து விடும். 

Monday, October 1, 2012

THUGLAK KELVI BADHIL

கே: ‘கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு, அன்னா ஹஸாரே குழு உறுப்பினர் கெஜ்ரிவால் ஆதரவு அளித்துள்ளது பற்றி...?

ப: தான் நிற்கிற இடத்தில் ஒரு கூட்டம் கூடுகிறது என்பதை டெலிவிஷனில் அடிக்கடி பார்ப்பதில், கெஜ்ரிவாலுக்கு ஆசை வந்து விட்டது. அதனால் எங்கெங்கு கூட்டம் சேருகிறதோ, அங்கெல்லாம் போய் நின்று விடுவார் போலிருக்கிறது. இப்பொழுது கூடன்குளத்தில் ஒரு கூட்டத்தைப் பார்த்தார்; அங்கு போய் நின்று கொண்டு விட்டார். அடுத்து சென்னை, மைலாப்பூரில் அறுபத்து மூவர் விழாவில் கூட்டம் சேருகிறபோது, அதற்கு முன்னால் போய் நின்று கொண்டு, ‘இவ்வளவு பேர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஊழலை எதிர்க்கிறார்கள். இவர்கள் எல்லாம் என்னுடைய புதிய கட்சிக்கு ஆதரவு தருகிறார்கள்’ என்று சொன்னாலும் சொல்வார்.

Wednesday, November 2, 2011

நேருவின் பித்துக்குளித்தனம், ஆயுத பூஜை

ஆயுத பூஜை 

நேருவின் பித்துக்குளித்தனம்

Monday, March 16, 2009

தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால், பதவியைத் துறக்க விருப்பமில்லை - என்ற கருணாநிதியின் கடமை உணர்வு பற்றி?

ஆமாம். வாஸ்தவமான பேச்சு. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதிமாறன்... எல்லோரும் தமிழர்கள் தானே!

ORKUT THUGLAK COMMUNITY: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=59766994

Sunday, March 8, 2009

கே: கடலூரில் இலங்கைப் பிரச்னைக்காக உயிர் நீத்த தமிழ்வேந்தனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்பிய விடுதலைச் சிறுத்தைகள், கடலூர் பஸ் நிலையத்தில் நுழைந்து 21 பஸ்களைச் சேதப்படுத்தி, வங்கி ATM மற்றும் BSNL அலுவலக கண்ணாடிகளையும் உடைத்து, DMK பேனர்களையும் சேதப்படுத்தியுள்ளனர் - என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளாரே?

ப: இங்கே பஸ்களை எரித்து, பொதுச் சொத்தை நாசம் செய்தால், இலங்கைப் பிரச்னை தீர்ந்து விடுமா? இது தொடர்பாக, 'துக்ளக்' வாசகர் 'அதிரை புகாரி' என்பவர், நமக்கு அனுப்பியுள்ள கேள்வி, நமது மாநில அரசியல் தலைவர்கள் பார்வைக்கு உரியது. அவர் கேள்வி இது: 'சிங்கள அரசு, போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கையில் உள்ள எந்த தமிழனும் தீக்குளிக்க வில்லையே, ஏன்?'




Sunday, March 1, 2009

கேள்வி பதில்

கே: ' கவர்னன்ஸ்' தொடர்பான மத்திய அரசின் பதினெட்டு விருதுகளில், பதினொன்று பா... மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கிடைத்துள்ளது குறித்தும், தமிழகத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காதது குறித்தும்?

: 'E கவர்னன்ஸ்'க்கு விருது தருகிற மத்திய அரசு, 'N கவர்னன்ஸ்'க்கு ஒரு விருது தரட்டுமே! அது நிச்சயம் தமிழகத்திற்கு தான். (N = No)

கே: தற்போதைய நிலையில், ராமர் கோவில் பிரச்னையை பா... கிளப்புவது சரி தானா?

: தேவையே இல்லை என்பது என் கருத்து. இது, ஆறப் போட்டுத் தீர வேண்டிய பிரச்னையாகத்தான், இப்போது காட்சியளிக்கிறது. கிளறுவது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன்.

கே: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

: ஏன் நிறுத்தி விட்டீர்கள்? 'பித்தலாட்டம் என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது? மோசடி, ஏமாற்று வேலை, போலி வேடம்....என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?' என்று கேட்க வேண்டியது தானே! அப்போது தானே உங்கள் கேள்வி முழுமை அடையும்!

கே: டெல்லியில் .தி.மு..வினர் நடத்திய உண்ணாவிரத மேடையில், '20 ஆண்டு காலமாக இருந்து வரும் இலங்கைப் பிரச்னையை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை' - என்று அத்வானி பேசியிருக்கிறாரே? பா..., ஆட்சியில் இருந்த போது கண்டு கொண்டிருக்கலாமே?

: இதை அரசியலுக்குப் பயன்படுத்துவது என்று தீர்மானித்து விட்ட பிறகு, பேச்சில் நியாயமோ , தர்க்கவாதமோ இருக்குமா என்ன? இப்படி அர்த்தம் இல்லாமல் தான் பேச்சு அமையும்.

CHO'S HONESTY


இதை விட ஒரு பெரிய மனிதர் எப்படி உண்மையாக இருக்க முடியும்? HATS OFF CHO!!!