கே: எம்.பி.க்கள் பதவி விலகி, மத்திய அரசு கவிழ்ந்து விட்டால், இலங்கை அரசை இந்த அளவிற்குக் கூட தட்டிக் கேட்டு தமிழர்களுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? - என்று கேட்கிறாரே முதல்வர் கலைஞர்?
ப: 'ராஜினாமா' என்று பூச்சாண்டி காட்டிய போது, பிறக்காத ஞானம், கலைஞருக்கு பின்னர் பிறந்தது. எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாகச் சபதம் செய்த போது, மத்திய அரசு கவிழ்ந்தால் என்ன செய்வது - என்ற கேள்வி அவர் மனதில் எழாமல் போனது ஏனோ தெரியவில்லை.
அது சரி, நகைச்சுவை நாடகம் தானே! இதில் காமெடியன் மிரட்டுவதும், பின்னர் ஓடி விடுவதும் வழக்கமான காட்சிகள் தானே! அதை ரசிக்க வேண்டுமே தவிர, 'ஏன் மிரட்டினார்'? ஏன் ஓடினார்?' என்றெல்லாம் கேள்விகள் கேட்கக் கூடாது. காமெடிக் காட்சிகள் அப்படித்தான் இருக்கும்.