Thursday, March 12, 2009

'சோ' ராமசாமி - வாழ்க்கைக் குறிப்பு

'சோ' ராமசாமி - 1934 - ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 - ம் தேதி சென்னையில் பிறந்தார்.

இவருடைய தந்தையார் ரா.ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள்.

இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் (intermediate) விவேகானந்தா கல்லூரியிலும் (B.Sc.,) பயின்றார்.

1953-55-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று B.L பட்டம் பெற்றார்.

1957 லிருந்து 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாக 'பிராக்டிஸ்' செய்தார்.

1962 - லிருந்து T.T.K அனைத்து கம்பெனிகளுக்கும் Legal Advisor ஆக பணியாற்றினார் . 1957 - ம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார்.

இவருக்கு 1966 - ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

1970 - ம் ஆண்டு 'துக்ளக்' இதழை தொடங்கினார்.

பின்னர் 1976 வாக்கில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.

இவர் பத்திரிக்கை ஆசிரியர் , நாடக ஆசிரியர் ,நடிகர் , வக்கீல் போன்ற பல துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.


இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.


இவரது பத்திரிக்கை சேவைக்காக 1985 - ம் வருடம் 'மஹாரான மேவார்' வழங்கிய 'ஹால்டி காட்டி' விருதும் , 1986 -ல் 'வீரகேசரி' விருதும், 1994 - ம் வருடம் 'கொயங்கா' விருதும், 1998 - ம் வருடம் 'நச்சிக்கேதஸ்' விருதும் வழங்கப்பட்டது.


இவர் 22 நாடகங்களையும் , 8 நாவல்களையும், கணக்கற்ற அரசியல் மற்றும் வேறு பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

பல நாடகங்கள் எழுதியிருந்தாலும் , இவரின் , ' முகமது பின் துக்ளக் ' என்னும் 'அரசியல் நையாண்டி ' நாடகம் பிரசித்தி பெற்று விளங்கியது.

'துக்ளக்' இதழின் அரசியல் நிலைப்பாடுகள் அல்லது கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் கவனிப்பை பெறுபவை.