ORKUT THUGLAK COMMUNITY: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=59766994
முதல் கோணல் முற்றும் கோணல் என்று ஒரு பழமொழி உண்டு. அது போல மூன்றாவது அணி இறந்து 3-4 மாதங்கள் கூட ஆக வில்லை, மீண்டும் ஒரு மூன்றாவது அணி. ஆரம்பிக்கும் போதே அபசகுனம் போல நான் தான் p.m. candidate என்று மாயாவதி ஆரம்பித்து விட்டார்.
ஒரு பேச்சுக்கு இந்த அணி தேர்தலில் வென்றாலும், யாரை பிரதமர் ஆக்குவார்கள். மாயாவதியை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது, ஜெயலலிதாவை மாயாவதிக்கு பிடிக்காது, தேவ கௌடாவை யாருக்கும் பிடிக்காது.
இடது சாரிகள் பதில் கூற வேண்டிய எந்த பதவிக்கும் வர மாட்டர்கள். வெளியே இருந்து ஆதரவு கொடுத்து ghost government-ஆக இருப்பார்களே தவிர நேரடியாக ஆட்சி செய்ய மாட்டர்கள். தங்கள் இடமான கேரளாவில் கூட இரெண்டு இடது சாரி கட்சிகளுக்குள் சீட் பேரத்தில் தகராறு. ஆனால் மற்ற இடத்தில் ஒற்றுமை. என்ன கொள்கையோ?
முலாயம், சந்திரபாபு நாயுடு இருவரும் தங்கள் கட்சியை மக்கள் மறக்காமல் இருக்க எதையாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
எப்பேர்பட்ட அணி.
முகம்மது பின் துக்ளக் நாடகத்தில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி என்றெல்லாம் வரும். கூட்டணி கூத்துக்கள் இவ்வளவு மலிவாக இல்லாத அந்த காலத்திலேயே இப்போது நடக்கும் அத்தனை அரசியல் குழப்பங்களையும் அதில் அப்பட்டமாக காட்டி இருப்பார் சோ. அது தான் நினைவுக்கு வருகிறது.