THIS WAS MY RESPONSE TO THE FOLLOWING BLOG POST.
http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_11.html
ஜெயகாந்தன் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஒருவன் எழுந்து கேள்வி கேட்டான். பாஞ்சாலி பத்தினியா? இல்லை பரத்தையா? என்று. அதற்கு JK என்ன சொன்னார் தெரியுமா? பத்தினிக்கு பிறந்தவன் பார்வையில் அவள் பத்தினி, பரத்தைக்கு பிறந்தவன் பார்வையில் அவள் பரத்தை என்று.
அது போல இந்த மாதிரி சுவரொட்டிகள் அடிப்பவர்களுக்கு எல்லாம் மிகுந்த தாழ்வு மனப்பான்மையும் மன அழுத்தமும் இருக்கும் என்று தான் தோன்றுகிறது.
மற்றவர்கள் பிறப்பைப் பற்றி இவர்களுக்கு என்ன வந்தது? இவர்கள் சொல்வதைக் கேட்கா விட்டால் அவன் .........!! நான் சொல்கிறேன் இப்படிப் பேசும் திமிர் பிடித்தவர்களின் பிறப்பு தான் கேள்விக்குரியது என்று!! நல்லபடி பிறந்திருந்தால் இப்படி மற்றவர்களைத் தூற்றத் தோன்றாது.
சரி, தமிழர்கள் அங்கு கொல்லப் படுகிறார்கள், அங்கிருக்கும் தமிழர்கள் ஏன் தீக்குளிப்பதில்லை என்று ஒருவர் துக்ளக்கில் கேட்டுள்ளார். அங்கிருப்பவர்களை யாரும் தூண்டி விடுவதில்லை, அங்கிருப்பவர்களுக்கு உயிரின் மதிப்பு தெரியும். அங்கே தீக்குளித்தால் அதை த்யாகம் என்றோ வீரம் என்றோ கேனத்தனமாக புகழ ஆள் கிடையாது.
இவ்வளவு கொந்தளிக்கும் இந்த போலி தமிழ் உணர்வாளர்கள், அங்கே இலங்கையில் தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கும் போது , இங்கே உணவு அருந்தாமல் இருந்தார்கள? நீர் குடிக்காமல் இருந்தார்கள?வேலைக்குப் போகாமல் இருந்தார்களா? தண்ணி அடிக்காமல் இருந்தார்களா, சிகரெட் பிடிக்காமல் இருந்தார்களா? தாங்கள் அனுபவிக்கும் எந்த சுகத்தையும் இவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக விட்டுக் கொடுத்தது போல தெரிய வில்லையே!!
தற்கொலை செய்து கொள்வது தான் சட்ட விரோதம். வீட்டில் உண்ணாவிரதம் இருக்கலாமே! வீட்டுக்குள்ளே இருந்தால் மீடியா கவனம் கிடைக்காதே!!! மற்றவர்கள் கவனிக்கத் தான் இந்த ஆர்பாட்டம் எல்லாம். உண்மையிலேயே வருத்தம் இருந்தால் அது வெளிப்படும் விதமே வேறு.
இவர்களுக்கு இது தொழில். இதை செவ்வனே செய்கிறார்கள். அதே போல மற்றவர்களுக்கு வேறு உருப்படியான தொழில் இருக்கிறது. அதை செய்கிறார்கள். வேலை வெட்டி எல்லாவற்றையும் விட்டு விட்டு நடு ரோட்டில் மனித சங்கிலியில் நின்றால் தான் அவனுக்கு தமிழ் உணர்வு இருக்கிறது என்று எந்த கபோதி சொன்னானோ தெரியவில்லை.
தமிழ் உணர்வை வெளிப்படுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன. உனக்கு ஒரு வழி என்றால் எனக்கு ஒரு வழி. நீ சொல்வதைக் கேட்டால் தான் எனக்கு தமிழ் உணர்வு சர்டிபிகேட் கிடைக்கும் என்றால் அது எனக்குத் தேவையே இல்லை. நான் தமிழ் விரோதியாகவே இருந்து விட்டு போகிறேன்.