Wednesday, February 25, 2009

ILLEGAL INSTIGATION

SUPPORT FOR SRILANKAN TAMILS HAS TAKEN AN UGLY FACE IN THE HANDS OF TAMILNADU POLITICIANS. THE SUPPORT NOW IS CLEARLY FOR LTTE, A TERRORIST
OUTFIT BANNED IN INDIA. VERY VERY UNFORTUNATE THAT THE BJP HAS ALSO JOINED IN THIS ILLEGAL INSTIGATION.


கேள்வி பதில் 25.2.2009




sathya cartoon 25.2.2009

Tuesday, February 24, 2009

EDITORIAL 25.2.2009


TAMILNADU ASSEMBLY BUDGET SESSION-2009

GET READY FOR A RIB-TICKLING PARODY BY SATHYA ON THE BUDGET SESSION.


Friday, February 20, 2009

விதி

விதி என்றால் என்ன? newton's law என்பதை newton-இன் விதி என்கிறோம். அதே போல the nature's law is விதி.

விதிப்படி நடக்கும் என்றால் இயற்கையின் படி, இயற்கை விதியின் படி நடக்கும் என்று பொருள். இயற்கையை யாராவது மாற்ற முடியுமா? நெருப்பில் கை வைத்தால் சுடும். மாடியிலிருந்து கீழே விழுந்தால் மண்டை உடையும். இது விதி.

நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது நடக்கும். இதுவே விதி. கெட்டவன் நன்றாக இருக்கிறானே, நல்லவன் எல்லாம் கஷ்டப் படுகிறானே என்று கேட்பவர்கள் உண்டு.

இந்த விதிக்கு அதிருஷ்டம் என்று ஒரு பேர் உண்டு. நாம் அதிருஷ்டம் என்பதை luck எனும் அர்த்தத்தில் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் அதன் பொருள் கண்ணுக்கு தெரியாதது என்பதே ஆகும். திருஷ்டி- பார்வை, த்ருஷ்டம் - தெரிவது, அதிருஷ்டம் -தெரியாதது.

இந்த விதி என்பது கண்ணுக்கு தெரிவதில்லை. சில விதிகள் உடனே செயல் படும். சில விதிகள் அதற்குரிய நேரத்தில் செயல் படும். பப்பாளி மரம் 6 மாதத்தில் வளர்ந்து 2 வருடத்தில் பழம் கொடுக்கும். ஆனால் தென்னை மரம் 15 வருடங்கள் வளர்ந்த பின் தான் இளநீர் கொடுக்கும். ஒவ்வொன்றிற்கும் இயற்கை ஒரு கால நேரம் வைத்திருக்கிறது அல்லவா. அந்த அந்த நேரத்தில் தான் பலன் கொடுக்க ஆரம்பிக்கும். பலன் என்பதே பலம்(फलम), பழம் என்பதன் திரிபே ஆகும். to bear fruit, fructify என்பார்கள்.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமைக்கும் ஏமாப் புடைத்து

என்றான் வள்ளுவன். பல பிறவிகள் உண்டு என்பதற்கு வள்ளுவமே சான்று.

வள்ளுவனை ஏன் சொல்கிறேன் என்றால் பகுத்தறிவுவாதிகளும் மறுக்க முடியாதவன் என்பதால்.

சில செயல்கள், கர்மங்கள் உடனே பலன் தரும். சில செயல்கள் பின் வரும் பிறவிகளில் தான் பலன் தரும்.

கடவுளை ஒப்பாதவர்கள் கூட இயற்கையை ஒப்புகிறார்கள். இயற்கை தப்பே செய்யாது என்று ஒத்துக் கொள்கிறார்கள். அந்த இயற்கை தான் இத்தனை ஏற்றத் தாழ்வுகளையும் படைத்திருக்கிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை விடுங்கள்.
அதற்கு கம்யுனிஸ்ட்டுகள் முதற்கொண்டு பல பேர் பல காரணம் சொல்வார்கள்.

மற்றபடி தான் எத்தனை வித்தியாசங்கள். அழகில், அறிவில், நிறத்தில், நடத்தையில், ஒழுக்கத்தில் என்று இத்தனை விதமாக இயற்கை படைத்திருக்கிறதே. ஏன்? விதி. இயற்கையின் சட்டம். நாம் போடும் சட்டங்கள் போல் அதை வளைக்க முடியாது.

புண்ணியம் செய்தவன் நல்லபடி பிறக்க வேண்டும். பாவம் செய்தவன் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்தப் பிறவியை மட்டும் பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சும்.

Thursday, February 19, 2009

தூய தமிழில் பேசுவதாக நினைத்துக் கொண்டு சில பேர் இலக்கம் என்று சொல்கிறார்கள். அது ஸம்ஸ்க்ருத வார்த்தை என்பதே தெரியாமல்.

லக்ஷ்மணன் என்பது தமிழில் இலக்குவன்.
லக்ஷ்மி என்பது தமிழில் இலக்குமி.
லக்ஷம் என்பது தமிழில் இலக்கம்.

கோடி என்பதும் அவ்வாறே. லட்சியம், அலட்சியம், சிங்காரம் என்பவையும் அவ்வாறே.


ஒற்றுப் பிழை இல்லாமல் இன்று எழுதுவோர் மிக மிகக் குறைவு. அதுவும் orkut போன்ற வலைத்தளங்களில் தமிழ் படும் பாடு சொல்லி முடியாது. டைப் அடிப்பதும் கஷ்டம். பிழை நீக்குவதும் கடினம். நானே சில இடங்களில் பிழையுடன் தான் அடித்திருக்கிறேன்.

கவனித்து திருத்துவதற்குள் வேறு யாரவது post செய்து விடுவார்கள். phpbb2 போன்ற வசதியும் orkut-இல் கிடையாது எடிட் செய்வதற்கு. சில பேர் எழுதுவது செம காமெடியாக இருக்கும். ஆனால் சில சமயம் வயிறு எரியும்.

என்ன செய்வது 'என் செல்வங்களே' என்று கண்ணாம்பா ஸ்டைல்-இல் கண்ணீர் விடத் தான் முடியும்.

Wednesday, February 18, 2009

தமிழ்ப் பெயர்கள்

கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், கோபால்சாமி, ஸ்டாலின், வரதராஜன், ரஜினிகாந்த், விஜயகாந்த்- இவற்றில் எதுவுமே தமிழ் கிடையாது.

அதனால் என்ன குறைந்து போய் விட்டது? இந்தப் பெயர்கள் நாள் தோறும் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை வீடுகளிலும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

பெயர் என்பது என்ன? ஒருவரை அழைப்பதற்கும், அடையாளம் காட்டுவதற்கும் பயன் படுவது அவ்வளவு தானே?

மேலே சொன்ன பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்களாகி விட்டன. மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இதை எல்லாம் தமிழ்ப்படுத்துவது இயலாத மற்றும் வேண்டாத காரியம்.

ஆனால், மக்கள் பல ஆயிரம் வருடங்களாக ஏற்றுக்கொண்ட தமிழ்ப்புத்தாண்டை வேறு நாளுக்கு மாற்றுவேன் என்று அடம்பிடித்தால், உன் பெயரை முதலில் தமிழில் மாற்றிக்கொள், பிறகு புத்தாண்டை மாற்றலாம் என்று தானே சொல்லத் தோன்றும்.

Tuesday, February 17, 2009

தமிழைப் படுத்தாதீர்கள்!!

தமிழ் என்பதே மிகவும் அழகான வார்த்தை.

த - வல்லினம்
மி- மெல்லினம்
ழ் - இடையினம், என்று தன் பெயரிலேயே மொழியியல் பிரயோகம் கொண்டது.

தமிழ் ரசனையுடன் இருந்தால், அதனை ரசித்து அனுபவிக்கத் தோன்றும்.

தமிழ் வெறியுடன் திரிந்தால், மற்றவர்களை அடிக்கத் தான் தோன்றும்.

பல பிறமொழி வார்த்தைகள் தமிழில் கலந்து தமிழாகிப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. அதை எல்லாம் தமிழ்ப்படுத்துவது என்பது, தமிழைப் படுத்துவது தான்.

டம்ளர் என்பது தமிழ் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். குவளை என்பதே சரியான வார்த்தை. ஆனால் குவளை என்பது எத்தனைப் பேருக்கு புரியும். அதை விட எளிமையான டம்ளர் என்ற சொல்லைப் பயன் படுத்தினால் என்ன குடியா முழுகி விடும். இல்லை என்றால் அதையும் விட எளிமையான கிளாஸ் என்ற தமிழ் வார்த்தையைப் பயன் படுத்தினால் போகிறது.

இது போல், ரசீது, தயார், தயாரிப்பு, தம்புரா, வாத்தியார், லிங்கம், சிவம், ஜன்னல், ஆப்பிள், அதிகாரி, தந்தம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், விதி, மதி, சதி, சுகம், துக்கம், டீ, காபி, என்று ஆயிரக் கணக்கான ஏன், லட்சக்கணக்கான பிறமொழி வார்த்தைகள் தமிழில் இருக்கின்றன. லட்சம் என்பதே தமிழ் கிடையாது!!

இவற்றை எல்லாம் அப்படியே உபயோகிப்பது நலமா அல்லது கஷ்டப்பட்டு இவற்றிற்கு கொட்டை வடி நீர், சுய முயற்சியால் பெற்ற தற்காப்புக் குறைவு அடைவு (aids) என்று யாருமே உபயோகப்படுத்தாத வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது நலமா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.




தமிழ் அறிவோம்

தமிழ் தமிழ் என்று கூவி வியாபாரம் செய்யும் இக்காலத்தில் எது தமிழ், எது தமிழ் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

ர, ல, ட இந்த எழுத்துக்களில் ஆரம்பிப்பது தமிழ்ச்சொல்லே அல்ல.

உதாரணம் ரம்பம், லட்டு , டமாரம் போன்றவை. பெயர்ச்சொற்கள் வந்தாலும் அதன் முன் உயிரெழுத்து சேர்த்து தான் எழுத வேண்டும்.

உதாரணம்: இரவி, இலங்கை, அரங்கன். இது இலக்கணம்.

தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் 103 எழுத்துக்களில் தான் தமிழ் வார்த்தை ஆரம்பிக்க முடியும் என்பது நன்னூல் விதி.

ஆனால் இன்று தமிழ் தமிழ் என்று உயிர் விடும் எவ்வளவு பேர் இப்படி எழுதுகிறார்கள். அல்லது கொதித்து எழும் இளைஞர்கள் தான் இதை எல்லாம் கண்டு கொள்கிறார்களா? தங்கள் மொழியைப் பற்றிய அறிவே இவர்களுக்கு இல்லை. ஆனால் கொதித்து எழுந்திட மட்டும் தெரியும்.

தமிழ் என்று இன்றைய இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பாதி சொற்களுக்கு மேல் தமிழ் கிடையாது. தமிழ்ச்சொல்லே ஆனாலும் அதைக் கேள்வியே படாத தலைமுறை தான் இன்று உள்ளது. இருக்கட்டும். அது அவர்கள் இஷ்டம். ஆனால் ஒன்றும் தெரியாமல் உணர்ச்சிவசப்பட மட்டும் தெரிந்தால் அவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள்.

சில சொற்களைப் பார்போம். நல்ல பாம்பு. இது தமிழா இல்லையா?

இதில் என்ன சந்தேகம். நல்ல என்பதும் தமிழ் வார்த்தை. பாம்பு என்பதும் தமிழ் வார்த்தை. நல்ல பாம்பு என்பதும் தமிழாகத் தானே இருக்க வேண்டும்.

அது தான் இல்லை.

சரி. அது என்ன நல்ல பாம்பு. அது யாரையும் கடிக்காதா? அல்லது அது கடித்தால் உயிர் போகாதா? யாருக்கு நல்லது அந்த பாம்பு?

நல்ல என்றால் தெலுங்கில் கருப்பு என்று அர்த்தம். நல்ல பாம்பு என்றால் கருப்பு நிறமுள்ள பாம்பு அதாவது கருநாகம் என்று அர்த்தம்.

அதே போல் தான் நல்லெண்ணெய் என்ற சொல்லும். மற்ற எண்ணெய் எல்லாம் கெட்ட எண்ணெய் என்று அர்த்தமா ? எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தால் அது கருநிறத்தில் இருக்கும். அதனால் அது நல்ல எண்ணெய். அதுவே நல்லது என்று பொருள் படும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கப்பட்டு பின் கூட்டு விதியால் நல்லெண்ணய் ஆகிவிட்டது.

மேலும் தமிழ் கற்போம்.

Friday, February 13, 2009

கே: விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லையென்றால் தமிழ்நாட்டில், தமிழுக்கு சமாதி கட்டியிருப்பார்கள் - என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?

ப: இந்த இரு கட்சிகளும் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னால், தமிழ் சமாதி அடைந்திருந்ததா? இவர்கள் தான் தோண்டி எடுத்து, புத்துயிர் அளித்திருக்கிறார்களா? தமிழ் என்று ஆரம்பித்தால், என்ன வேண்டுமானாலும் கதை அளக்கலாம்- என்பது தமிழக அரசியலில் ஒரு விதிமுறை ஆகிவிட்டது.

Thursday, February 12, 2009

இலங்கைப் பிரச்னை.

பிப்ரவரி 10, 2009

இன்று அனைத்து நாளேடுகளிலும் ஒரு செய்தி வந்துள்ளது. தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு பெண் விடுதலைப் புலியின் குண்டு வெடிப்புத் தாக்குதலால் 28 பேர் அகதிகள் முகாமில் இறந்துள்ளனர். இதில் 20 ராணுவத்தினரும், 8 தமிழர்களும் உயிர் இழந்துள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆனால் இதைப் பற்றி எந்த கட்சியும் கண்டனம் தெரிவிக்க வில்லை. ஏன்?

அந்த 8 பேர் தமிழர்கள் இல்லையா?

சரி அரசியல் கட்சிகளுக்கு பல காரணங்கள் உள்ளன. மற்றபடி இந்த விஷயத்தில் கொந்தளித்து எழும் மற்றவர்கள் எங்கே போனார்கள்?

அவர்கள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

புலிகள் கொன்றால் பரவாயில்லை. புலிகள் கொல்லத் தானே தமிழர்கள் உயிர் இருக்கிறது.

நம் மக்களுக்கு சொந்த அறிவும் கிடையாது. ஞாபகமும் கிடையாது. ஊடகங்கள் எதைப் பெரிது படுத்துகிறதோ அதையே பேசும். ஒரு வாரம் கழித்து மறந்து போகும். அந்த ஒரு தைரியத்தில் தானே அரசியல் கட்சிகள் வாரா வாரம் புது பொய்களைச் சொல்கின்றன.

இல்லை என்றால் இன்று கொதித்து எழுந்திடும் தமிழன், 70 வருடமாக நடக்கும் இந்த பிரச்னையை சென்ற வருடம் எல்லாம் ipl மேட்சுகளிலும், சினிமாவிலும் தன்னை மறந்திருப்பானா?

இலங்கைத் தமிழர்கள் இங்குள்ள அரசியல்வாதிகளை மதிப்பதே இல்லை. அவர்களுக்கு இவர்களின் தகிடுதத்தம் நன்றாகவே தெரிந்து தான் உள்ளது. இங்கிருக்கும் இளைஞர்கள் உண்மையைப் புரிந்து கொண்டால் போதும்.

நவீன் சாவ்லா விவகாரம்


Sunday, February 8, 2009

போலி தமிழ்ப் பற்று

மக்கள் தொலைக்காட்சிக்கு என்று ஒரு தனி வகைத் தமிழ் இருக்கிறது. எல்லோரும் ஒரு மாதிரி தமிழ் பேசினால் இவர்கள் தனியாக ஒரு தமிழ் பேசுவார்கள்.

'மத்திய' என்பது வடமொழியாம். அதனால் 'நடுவன்' அரசு என்று தான் சொல்ல வேண்டுமாம். ஆனால் அதிகாரி என்ற வார்த்தை தமிழ் வார்த்தையாம். அதை அப்படியே வைத்து கொள்வார்களாம்.

இன்னும் சில பத்திரிகைகள் இருக்கின்றன. செயலலிதா என்றும் சூலை மாதம், சனவரி மாதம் என்றும் தான் அச்சடிப்பார்கள். ஜ என்பது தமிழ் கிடையாதாம்.

ஆனால் ஸ்டாலின் என்று அச்சடிப்பார்கள். அப்போது மட்டும் ஸ தமிழ் எழுத்து ஆகி விடும்.

கார் என்று சொன்னால் தமிழ்ப் பற்று எப்படி வெளிப்படும். மகிழ்வுந்து என்றால் தான் நீ அக்மார்க் தமிழன். ஆனால் ஆப்பிள் பழத்தை ஆப்பிள் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் இன்னும் இவர்களுக்கு சரியான வார்த்தை கிடைக்க வில்லை. செம்பேரிக்காய் என்று சொன்னாலும் சொல்வார்கள். அப்படி அவர்கள் கண்டுபிடிக்கும் வரைக்கும் ஆப்பிள் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

இது போல் இன்னும் எத்தனையோ உதாரணங்கள்.

all arising out of identity crisis. போலி அடையாளங்கள் இருக்கிற வரைக்கும் இப்படிப் பட்ட முட்டாள் தனங்கள் செய்யத் தான் வேண்டி இருக்கும்.