Thursday, February 12, 2009

இலங்கைப் பிரச்னை.

பிப்ரவரி 10, 2009

இன்று அனைத்து நாளேடுகளிலும் ஒரு செய்தி வந்துள்ளது. தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு பெண் விடுதலைப் புலியின் குண்டு வெடிப்புத் தாக்குதலால் 28 பேர் அகதிகள் முகாமில் இறந்துள்ளனர். இதில் 20 ராணுவத்தினரும், 8 தமிழர்களும் உயிர் இழந்துள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆனால் இதைப் பற்றி எந்த கட்சியும் கண்டனம் தெரிவிக்க வில்லை. ஏன்?

அந்த 8 பேர் தமிழர்கள் இல்லையா?

சரி அரசியல் கட்சிகளுக்கு பல காரணங்கள் உள்ளன. மற்றபடி இந்த விஷயத்தில் கொந்தளித்து எழும் மற்றவர்கள் எங்கே போனார்கள்?

அவர்கள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

புலிகள் கொன்றால் பரவாயில்லை. புலிகள் கொல்லத் தானே தமிழர்கள் உயிர் இருக்கிறது.

நம் மக்களுக்கு சொந்த அறிவும் கிடையாது. ஞாபகமும் கிடையாது. ஊடகங்கள் எதைப் பெரிது படுத்துகிறதோ அதையே பேசும். ஒரு வாரம் கழித்து மறந்து போகும். அந்த ஒரு தைரியத்தில் தானே அரசியல் கட்சிகள் வாரா வாரம் புது பொய்களைச் சொல்கின்றன.

இல்லை என்றால் இன்று கொதித்து எழுந்திடும் தமிழன், 70 வருடமாக நடக்கும் இந்த பிரச்னையை சென்ற வருடம் எல்லாம் ipl மேட்சுகளிலும், சினிமாவிலும் தன்னை மறந்திருப்பானா?

இலங்கைத் தமிழர்கள் இங்குள்ள அரசியல்வாதிகளை மதிப்பதே இல்லை. அவர்களுக்கு இவர்களின் தகிடுதத்தம் நன்றாகவே தெரிந்து தான் உள்ளது. இங்கிருக்கும் இளைஞர்கள் உண்மையைப் புரிந்து கொண்டால் போதும்.